Saturday, September 10, 2016

Mahalaya Tharpanam...

இனி பித்ருபக்ஷம் என்று சொல்லப்படும் மஹாளய பக்ஷம் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன என்பதை எல்லாம் இங்கு காண்போம். அதாவது, திருமணம் செய்து கொண்டு, இல்வாழ்க்கை நடத்தும் ஒவ்வொருவனுக்கும் ஐந்து தலையாய கடமைகள் உள்ளன. இதனைப் பற்றி, ஆபஸ்தம்பர் , பாஹ்யனர் மற்றும் பலர் கிருஹ்ய சூத்திரம் என்று, இல்வாழ்வான் என்று சொல்லப்படும் கிருஹஸ்தர்கள் எச்சரிக்க வேண்டிய நியம நிசத்தைகளை தொகுத்து வழங்கி உள்ளார்கள்.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஐந்து பேருக்கு அல்லது ஐந்து விதத்தில் கடன் பட்டு இருக்கிறார்கள். அவைகள் என்ன என்று தெரிந்து கொள்வோமா?

பித்ரு ருணம் (தந்தை, தாய் மற்றும் மூதாதையர்கள்)
தேவ ருணம்  (இறைவன் மற்றும் தேவதைகள்)
பூத  ருணம்  (நம்முடன் வாழும் பிற உயிரினங்கள்)
ரிஷி ருணம்  (ரிஷிகள்)
மனுஷ்ய ருணம் (நம்முடன் வாழும் சக மனிதர்கள்)

ருணம் என்ற வடமொழி சொல்லுக்கு கடன் என்று பொருள்படும்.  இவற்றுள் இறைவனுக்கு தொண்டு செய்தல் மிகவும் முக்கியம். அதே போல நம்முடன் வாழும்  பிற உயிரினங்கள் ஆனா  எறும்பு, முதலிய பிராணிகளுக்கு உணவளித்து தருமங்கள் செய்ய வேண்டும். விருந்தினரை உபசரித்தல், ஏழை எளியவர்களை பேணுதல் போன்ற சேவைகளை மனித்த்தர்களுக்கு செய்ய வேண்டும். வேத வேதாந்தங்களை எல்லாம் நமக்கு அளித்த முனிவர்களுக்கு தர்ப்பணங்கள் முதலியவை (தேவ,ரிஷி தர்ப்பணங்கள்) செய்து அந்த கடமையை நிறைவேற்ற வேண்டும்.

இப்பொழுது நம் முன்னோர்கள் ஆன பித்ருக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன  என்றால், இந்த உடல், பொருள் எல்லாம் அவர்க நமக்கு வழங்கியவைகள் என்பதினால், நாம் எப்பொழுதும் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். தாய் வலி மற்றும் தந்தை வலி  சேர்ந்தவர்கள் - பெற்றோருடன் சேர்த்து 3 தலைமுறைகளுக்கு தர்ப்பணம் (எள்ளும் நீரும் அளித்தல்)  மற்றும் ஸ்ரார்த்தம் (வேள்வி தீயில் உணவு முதலியவை அளிப்பது) செய்யும் விதி முறைகளை சாத்திரங்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. காக்கை எம தர்மனுடைய வாஹனம் என்பதினால் , காக்கை உண்ணும் உணவாயு அந்த வானுலகில் உள்ள நம்முடைய முன்னோர்களுக்கு சென்று அடையும் என்பது நம் மரபு.

அதாவது புரட்டாசி மாதம் வரும் பொருண்மைக்கு அடுத்தது, பதினைந்து நாட்கள் (ஒரு பக்ஷம்) - மிகவும் இருளடைந்த காலம் என்றும், மேல் உலகத்தில் மாலை வேலை என்றும், அந்த நேரத்தில் நம்முடைய முன்னோர்களை எல்லோரும் பூலோகம் வருவார்கள் என்பதும்  நம்முடைய நம்பிக்கை. அந்த சமயத்தில் அவர்களுக்காக  நீர் வார்த்தல் (தர்ப்பணம்) , வேள்வி (சிரார்த்தம்), மற்றும் தன தர்மங்கள் செய்தல் இந்த உலக நன்மைகள் எல்லாம் நம்மை வந்து அடையும் என்பது நம்முடைய மரபு. நம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அல்லது, நம் நண்பர்கள்எ ன்று அனைவருக்கும் (இறந்து போனவர்கள்) காருண்ய பித்ரு என்று ,  அஞ்சலி (ஸ்ரார்த்த தர்பணாதிகள்)  செலுத்துவது மிகவும் உத்தமம்.